ஊரடங்கு காலம்

என் கால்கள் என்னை வெறுக்க தொடங்கிவிட்டன ஏன் என்று தெரியுமா?
தொடர்ந்து காடுகளிலும், மேடுகளிழும் பயணித்துக் கொண்டிருந்தவன் தற்போது நான்கு சுவற்றிற்குள் சுருண்டதற்காக.
என் கண்கள் என்னை ஏளனமாக பார்க்கிறது, ஆமாம் தொடர்ந்து பறவைகளையும், இயற்கையையும் ரசித்து கொண்டிருந்தேன் என்னை இப்படி கணினியின் திரையை பார்க்கவைத்துவிட்டாயே என்று.
என் மனது கெஞ்சுகிறது, "தயவுசெய்து என்னை வெளியே கூடிசெல்" என்று. பதிலளித்தேன், "இதுவும் சுகமாகத்தான் இருக்கிறது ஆனால் சுமையாகும்; காலம் நீடித்தால்" என்று.

எழுதியவர் : மர்ஜுக் (4-Apr-20, 3:15 pm)
சேர்த்தது : சையது மர்ஜுக்
Tanglish : ooradanku kaalam
பார்வை : 104

மேலே