போராட்டம்✊----இஷான்

எழுத்துக்களுக்கு இரண்டு
சக்கரங்கள் முளைக்கிறது...
சிந்தனைகள் உருட்டிவிட
விமர்சன நூலில் சிக்கி நிற்கிறது...
கற்பனை கிழக்காம்...
இலக்கணம் மேற்காம்...
அனுபவம் தெற்காம்...
அட கோர்வையும் வடக்காம்...
எழுத்துக்களின் மேனி
கறுப்புத் தோல்களாம்....
எழுத்துக்களின் கண்கள்
மாறுகண்களாம்...
எழுத்தின் இதயம்
நீண்ட நாள் துடிக்காதாம்....
புதைத்துவிட்டு தவறியும்
நீர் தெளித்திட வேணாமாம்...
படகொன்றில் எழுத்துக்களை ஏற்றி
துணிவின் துடுப்பால் நகரவா?
என்று கேட்டேன்...
ஆமைக்கு தூரம் எட்டாது
ஏணி ஒன்று எட்டித் தரவா என்று
கைக்கு கைக்கு பற்களை காட்டினர்...
படமெடுக்காமல் பாம்பு கொத்தாது
என்று வெளியே வந்தேன்...(இஷான்)

எழுதியவர் : இஷான் (4-Apr-20, 2:03 pm)
சேர்த்தது : இஷான்
பார்வை : 146

மேலே