கேவல் ராஜ்

ஏன்டா அமெரிக்கா தம்பி, உம் பையனோட பேரு என்னடா? அங்க நம்ம தமிழர்கள் தமிழ்ச் சங்கம் எல்லாம் வச்சு நடத்தறாங்களாம். பெருமையா இருக்குதடா.
@@@@@
இங்க மாதிரிதான் அங்கயும். பெரும்பாலான தமிழர்கள் அவுங்க பிள்ளைங்களுக்கு இந்திப் பேருங்களத்தான் வைக்கிறாங்க அண்ணே.
@@@@@@
சரி உம் பையன் பேரு என்னடா அமெரிக்கா தம்பி ஆறுமுகம்?
@@@@@
எம் பையனோட பேரு கேவல் ராஜ்.
@@@@@
என்னது 'கேவல் ராஜ்'ஆ? என்னடா பேரு இது. தமிழ்ல கேவலம்ங்கிற சொல்லச் சுருக்கி 'கேவல்'னு வச்சுட்டயா.
@@@@@@
இல்ல அண்ணே.
@@@@@
'ராஜ்'ன்னா அரசன். கேவல் ராஜ்ன்னா கேவலமான அரசன் உம் பையன் பேரா?
@@@@@#
இது இந்திக் 'கேவல்' (Keval/Kewal = only) அண்ணே.
@@@@@@
அதுக்கு என்னடா அர்த்தம்.
@@@@@@
இந்தில 'கேவல்'ன்னா 'மட்டும்', 'ஒரே ஒரு' ன்னு அர்த்தம்.
@@@@@@
'மட்டும்' , 'ஒரே ஒரு' ன்னெல்லாம் பேரு வைக்கிறதா? நல்லா இருக்குதா?
@@@@@@
அண்ணே 'கேவல் சிங்'னு ஒரு இந்தி நடிகர் இருந்தாரு. நான் அந்தப் பேரை மனசில வச்சிட்டு எம் பையனுக்கு 'கேவல் ராஜ்'ன்னு பேரு வச்சேன். தமிழ்ப் பேரை வச்சு சுருக்கிக் கூப்படறதவிட "கேவல், இங்க வா. கேவல் கம் ஹியர்"ன்னு அவனைக் கூப்படறது மனசுக்கு திருப்தியா இருக்குதண்ணே.
@@@@@#
நல்லா பேரு வச்ச போடா அமெரிக்கா தம்பி ஆறுமுகம்.

எழுதியவர் : மலர் (8-Apr-20, 8:15 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 47

மேலே