ஒளியின் கீற்றினில்

ஒளிக் கீற்றில்
சுற்றி திரியும்
தூசிகளாக
சில ....
நினைவுகளும் ;

திக்குகள் அற்று
சுற்றி சுற்றி
ஒளியை மட்டுமாக
எல்லைகளாக
கொண்டு...

ஒளி ‌கீற்று
மறையும் வரை
அதில் ....
நினைவுகளும்
தூசிகள் போன்றே

மற்றோர் ஒளிக் கீற்று
தோன்றும் வரையில்
நீடித்திருக்கும்
நினைவுகளும் ....

தூசிகளாக
மாறிவிட
முற்று பெறாத
மனித வாழ்வின்
வானவில் தருணங்கள் .

🌼🙏🌼
✍️
piyu🌼

எழுதியவர் : Piyu (13-Apr-20, 8:51 pm)
சேர்த்தது : Piyu
பார்வை : 131

மேலே