கவிதையே நீயானாய்

கவிதையே நீயானாய்
*********************
கவிதையே நீயானாய்
---காற்றாய் சுகம்மானாய்
கருமணியாய் ஏக்கங்களை
--காதல்செய்ய வைத்தே
கலங்காத என்மனதையும்
--- கரைய செய்கிறாயே

காதல் கண்மணியே
--கவிதை பூவே
நீயில்லா இடமெல்லாம்
--- என்னில் திடமாய் வளருகிறாய்
நானிருக்கும் இடமெல்லாம்
---நிழலாய் தொடருகிறாய்
சேரும் நாட்களை
---எண்ணியே பூத்தே
வேர்த்திருக்கிறேன் கண்மணியே
---நீயே திகையாதே
-பேதை பெண்ணே
பேசாமல் இருக்காதே

---உயிராகி நொந்திடுவேன்
பெண்ணே மானே
---என்னின் கனியே
காலங்கள் கரைந்தாலும்
---கனலிலே காய்ந்தாலுமே
கவிதையாய் வாழ்வாய்
---கனியாய் சுவைப்பேனே
கவிச்சுடர் அகிலன் ராஜா

எழுதியவர் : அகிலன் ராஜா (23-Apr-20, 7:01 am)
Tanglish : kavithaiye neeyanay
பார்வை : 349

மேலே