முதுமொழிக் காஞ்சி 92

குறள் வெண்செந்துறை

ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
வீங்கல் வேண்டுவோன் பல்புகழ் தண்டான். 2

தண்டாப் பத்து, முதுமொழிக் காஞ்சி

பொருளுரை:

நிறைந்த ஓசையுடைய கடல் சூழ்ந்த உலகத்தில் வாழும் மக்களுக்கெல்லாம் சொல்வது என்னவென்றால், செல்வப் பெருக்கை விரும்புவோன் பலவகைப் புகழ்தரும் செய்கைகளைச் செய்யாமல் தவிரான்.

கருத்து:

ஆக்கத்தை வேண்டுவோன் ஒருவன் தனக்குப் பல புகழ் வரும் செய்கை களையான்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-Apr-20, 3:21 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 51

மேலே