கவிதை என் தோழிக்கு சமர்ப்பணம்...
உயிர்த்தோழி இதுவரையில் கேட்டதில்லை
இன்று தன் திருவாய் தான் திறந்து ,
கவியில் எதையும் சொல்பவனே
இந்த தோழியை பற்றி ஒருகவிதை
ஒரு வரியில் நீயும் சொல்லிவிடு - என்று
உரிமையாய் என்னிடம் கேட்டுவிட்டாள்....
என் சிந்தனை சிறுநேரம் சிறகடிக்க
என் நிந்தனை எல்லாம் கவிதொடுக்க ,
உருவம் இல்ல பொருளினையும்
ஒரு வரியில் கவிதையாய் நான் சொல்வேன் .
என் உயிரினும் மேவிய தோழி உன்னை
ஒரு வரியில் சொல்லிட வார்த்தை இல்லை.
உன்னை பற்றி கவிதை சொல்ல
வரிகளும் இங்கே நீளமில்லை !
வானத்தை வரியாய் செய்தாலும்
அதன் நீளமும் இங்கு போதவில்லை !
என் எண்ணத்தில் உதித்த சிலவரிகள்
இந்த எழுத்தில் நானும் சொல்கின்றேன் .
முகநக நட்பது நட்பல்ல நெஞ்சத்து
அகநக நட்பதே நட்பாகும்,
இந்த வள்ளுவன் வாய்மொழி வார்த்தை அல்ல
அது வாழ்க்கையின் உண்மையாய் உணர்ந்திட்டேன்.
இதுவரை தோழி உனை பார்த்ததில்லை ,
உன் வாழ்க்கை விவரமும் கேட்டதில்லை .
கணினியில் கருத்தின் மூலம் நட்பாகி
பொறுப்பாய் என் நட்பை அகமேற்று ,
நட்பினை நல்ல விதையாக்கி
புது பொலிவுடன் என்னை நீ தந்தாய்...
காதலில் இன்பம் மட்டும் அல்ல - அதில்
துன்பமே அதிகம் உள்ளதென ,
கனிவுடன் எனக்கு கருத்தளித்து
என் கவலைகள் துறந்திட நீ செய்தாய் ....
கல்வி என்பது கடமை அல்ல - அது
உன்னை உயர்த்திடும் கருவி என்று ,
கல்வெட்டில் பதித்திட்ட வரிகளைப்போல்
என் நெஞ்சில் உரைத்திட நீ செய்தாய்...
கவிதை வேறு நீ வேறு அல்ல
என் கவிதையின் முகவரி நீயன்றோ .
கவிதை என்றுமே அழகுதான் - அந்த
கவிதைக்கு அழகி தோழி நீயன்றோ ...
உன்னை கண்டு என் கவிதை அல்ல
உன் மனதை கண்டே என் கவிதை ....
நீ மலர்களில் அரிய (குறிஞ்சி) மலர்
முழுமதியில் நீ என்றும் (வளர்மதியே )....
என் காதலி எனக்கு இரண்டாம் பட்சம்
என் தோழி உன் ஒருத்தி முன் மட்டும் ....
கவிதைக்கு உவமையாய் இயற்கையை சொல்வேன்,
இயற்க்கைக்கு உவமையாக உன்னைவிட யாரை சொல்வேன்.
தோழி இன்னொரு தாய் என்பேன் - எனது
தாயை உன்னிடம் கண்டதினால்,
வேறு ஏதும் என்னில் வேண்டாம் என்பேன்
உயிர் போகும்வரை தோழி நீ உடன் இருந்தால்..
சில வரியினில் முடிக்க நினைத்தாலும்
முழுதாய் என்னால் முடியவில்லை ,
என் கவிதையின் முடிவுரை எழுதிவிட்டேன்
உன் பொருளுரை மட்டும் எதிர்பார்த்து................