கருவறுக்க இயலுமோ
வண்ண மொட்டு தனை
தேன் சொட்டுதனை
சின்ன சிட்டுதனை
சிறு வயது பட்டுதனை
சிதைத்து விட்டனரே.....
பூப்படைய போகுமுன்னே
புதைத்து விட்டனரே - இம்
மூப்படைந்த சிற்றினங்கள்....
கற்பென்ற அர்த்தம் ஒன்றை
கண்டிராத சிறுபெண்ணிவளின்
கனவு தனை கலைத்து
கற்பினையே அழித்த உனை
கருதறிக்குமுன் அறிந்திருந்தால்
கருதனிலே அழித்திருப்பாள்
பெற்றாயினும் உன்னை...
கழுமரத்தில் ஏற்றிருப்பாள்....