கொரானா காலம்

கொரானா காலம் _
| தாயிடம் ஆசியும்
கோயிலில் அருளையும்
ஆசிரியரிடம் பாடமும்
ஆருயிர் நண்பனிடம்
கை குலுக்கலும் இல்லா காலம் கொரானா காலம்

நாடாளும் அமைச்சரும்
காடு மேடு பாடுபடும்
கடனில் வாடும் விவசாயிம்
மாவட்டம் ஆளும் அதிகாரியும்
தங்க பட்டை ஜரிகை வேட்டி
எங்கும் கட்டி பெருமாள்
எம் பாட்டில் எனும் எத்தர்களுக்கும்
பன்னீரில் குளிக்கும் முதலாளிக்கும்
கண்ணீரில் கதறும் ஏழைக்கும் சமமென்ற காலமே கொரானா காலம்.
.

எழுதியவர் : R. நாச்சிமுத்து (2-May-20, 12:27 pm)
சேர்த்தது : Nachimutu R
பார்வை : 244

மேலே