Kanavu mattum pothum enaku

மெய் சிலிர்க்க வைக்கும்
மெல்ல மெல்ல மெழுகாய் உருக வைக்கும் சித்திரம் அவள்
வரைய முடியாத அவளொரு
அழகு ஓவியம்

தெற்கு திசை எங்கும் புயல்
அவள் மனதின் குழப்பங்கள்
அடித்ததில் கொஞ்சம்
சாய்ந்து விட்டேன்

அடிக்கடி சத்தம் இல்லா அருவி கொட்ட அதன் சாரலில் அருகில் நின்ற நான் நனைந்து விட்டேன்

புதியதோர் படைப்பு ஆனால் அவள் வயதோ கால் நூற்றாண்டு
படித்த எனக்கு அவள்
புதுமை தான்

நான் கொஞ்சவில்லை
அவள் குழந்தையும் இல்லை
அவளின் பேச்சு கொஞ்சலாய்
இருந்தது
தந்தையிடம் கேள்வி கேட்டு
நச்சரிக்கும் குழந்தையின்
மழலை தன்மை
மாறாதிருந்தது ருசித்து விட்டேன்

மின்னல் போல் வேகம்
கண்ணிமைத்து
முடிக்கும் நேரம் அவளின் கோபம்
ரசித்துவிட்டேன்

அவளின் பச்சரிசி பற்கள்
நிறுத்த தோன்றாத
ஆனந்த புன்னகை
அணைக்க படாத அடுப்பில்
பொங்கியவன் நான்

வண்ண வண்ண ஆடைகள்
அவள் அணிந்து வரும்
வண்ணத்தில் அணிந்து செல்ல வண்ணத்து பூச்சியிடத்தில்
வரம் கேட்டவன் நான்

வேகமும் அதிகமில்லை
நேரமும் நெருங்கி விட்டது
தொலைதூர பயணம்
தொலைந்து விட்டது
வந்த பாதையில் என் கண்களுக்கு இரையாக எதுவும் இருந்ததாக தோன்றவில்லை
நீ என் அருகில் இருந்ததால்
என்னை நான் மறந்து விட்டேன்

அவள் என் பாதையை கடந்து செல்பவள் நானோ அவளில் மலர நினைத்து உதிர்ந்த ரோஜா

மழை பெய்யும்போது நனைய செய்த துளிகள் எனக்கு சொந்தமில்லை

ரயில் ஓடும் பாதை பயணம் ரயிலில் தான் ஆனால் நடந்து செல்கிறேன்
பயண சீட்டு இல்லாமல்
இறக்கிவிட பட்டவனாய்

எழுதிய வரிகள் என்னுடையவை தான் என்னை சிதற செய்த செய்த சிந்தனைகளின் வெளித்தோற்றம்
தான் இந்த வரிகள்
ஆனால் கவிதை எனக்கு
சொந்தமில்லை

கடற் கரை மணலில் நின்று
நான் ரசித்த அலை ஒன்று
என் மீது மோதல் கொள்ளும்
என்ற ஆசை அதிகம் எனக்கு
என்னை பார்த்து வந்தது
என்னை சேரும் முன்
என் கனவும் முடிந்தது
அலையும் பிரிந்து
நுரையானது

விடியல் வேண்டாம் எனக்கு
கனவுலகம் அழகாய் இருக்கிறது
உறக்கம் மட்டும் போதும்
என்னை யாரும் எழுப்பி விடாதீர்கள் .

எழுதியவர் : Rajesh kanna R (2-May-20, 8:24 am)
சேர்த்தது : raghavanrajeshkanna
பார்வை : 215

மேலே