அருமையான காதல் கவிதை

💘💘💘💘💘💘💘💘💘💘💘

*கவிதை*

படைப்பு *கவிதை ரசிகன்*

💞💞💞💞💞💞💞💞💞💞💞

என்னவளே!

❣️கோடி மீது
படுத்தாலும்...
அது
உன் மடி மீது
படுக்கும் சுகத்திற்கு
ஈடாகுமா...?


💟ஆயிரம் முத்தங்கள்
நான் கொடுத்தாலும்...
நீ கொடுக்கும்
ஒரு முத்தத்திற்கு
அது ஈடாகுமா..?

🤎எமனையே!
நான்
வென்றாலும்...
அது
உன்னிடம்
நான்
தோற்பற்கு ஈடாகுமா..?


💛எத்தனையோ பொருள்கள்
போதையை கொடுத்தாலும்...
உன் கண்கள் கொடுக்கும்
போதைக்கு
அது ஈடாகுமா...?

💚உலகமே!
எனக்குச் சொந்தமானாலும்
அது
நீ ஒருத்தி சொந்தமாவற்கு
ஈடாகுமா...?

💜எல்லையில்லாத செல்வங்கள்
வந்து குவிந்தாலும்....
அது
உன் வழியாக வரும்
குழந்தைச் செல்வத்திற்கு
ஈடாகுமா...?

🧡நீயின்றி
பாலும் பழமும்
நான் சாப்பிட்டாலும்...
உன்னோடு
பழையச் சாதம்
சாப்பிடுவற்கு
அது ஈடாகுமா..?

❤️சாக வரம் கிடைத்தாலும்
அது
உன்னோடு
சாகும் வரத்திற்கு
ஈடாகுமா...?

*கவிதை ரசிகன்*

❣❣❣❣❣❣❣❣❣❣❣

எழுதியவர் : கவிதை ரசிகன் (3-May-20, 8:16 pm)
பார்வை : 146

மேலே