அல்லவை விலகும் தானாய் இனி
அனைவரிடமும் அன்பு செலுத்து...
எதிர்பார்த்து ஏமாந்துவிடாதே
அன்பால் பரிசளித்து மகழ்ந்திடு
பிரதிபலன் அதில் நோக்காதே
கொடுப்பது மட்டுமே உன் செயல்
எடுப்பவரிடம் கை ஏந்திடாதே
உன் உள்ளம் சொல்வதை பேசு....
பதிலுரை உண்மையென நம்பாதே ....
ஆழ்மனக் கட்டளைக்கு அடிபணி....
அடுத்தவர் ஆலோசனையில் குழம்பாதே....
பணிவாய் கனிவாய் நடந்துகொள்....
பயந்தவள் என்றெண்ணினும் மாறாதே...
வரவுக்குள் வரம்புடன் செலவு செய்...
கரவுகளை கணக்காய் விலக்கி வை
முதல் பார்வையில் எதையும் முடிவெடுக்காதே ....
முடிவுகளை இயன்றவரை மாற்றாதே....
உரிமை இல்லாதவர்களிடம் வரையறை தாண்டாதே....
உதறும் நெஞ்சத்திடம் மண்டியிடாதே....
பழகும் நோக்கத்தில் பவித்திரம் கடைபிடி...
பாத்திரம் பழுதென்றால் கிடையில் எறி.....
நல்லதை மட்டுமே செய்யத் துணி....
அல்லவை விலகும் தானாய் இனி...!
Amutha Porkodi Ammu

