மெளனம் அர்த்தமானது..

இரவின் இருளில்
என்னை நான்
புதைத்துக் கொண்டேன்...
உண்மையின்
வெளிச்சம் என்னை
அடையாளப்படுத்தாமல் இருக்க...
எதற்கிந்த ஓடி ஒளிதல்
என்னை நோக்கி
படையெடுக்கும் கேள்விகள்...
அணிவகுக்கும் அனைத்து
கேள்விகளுக்கும்
ஓரே பதில்...
பேசிய வார்த்தையில்
ஒரு உண்மை உண்டு...
பேசாத மெளனத்தில்
பல உண்மை உண்டு,,,
கேட்காது காதுகளுக்கு
வாய் திறப்பதால்
வார்த்தைகள் வீணாகும்...
அதற்கு மெளனமே
போதுமானது..

எழுதியவர் : நிலா தமிழன்... (17-Sep-11, 1:48 pm)
சேர்த்தது : john francis
பார்வை : 291

மேலே