இதயத்தில் போர்

தோன்றி மறைகிறது
இதயத்தில் மின்னலென !
வேரூன்றி நிலைத்த
நீங்காத நினைவுகள்
பயனானப் பொழுதுகள்
வீணானக் காலங்கள் !
அனைத்தும் இணைந்து
பின்னிப் பிணைந்து
இதயச் சுவரில்
முட்டி மோதுகிறது
போர் மூள்கிறது !
வாழ்ந்து முடித்த
வசந்த காலம்
மறந்து விடுகிறது !
வலிதந்த நேரம்
வந்து போகுது !
வாழப் போகும்
நாட்களை நினைத்து
வருந்திட செய்கிறது !
நாளும் நமதல்ல
நாளையும் நமதல்ல !
வாழ்வியல் புத்தகத்தின்
முகவுரையின் முதல்வரி !
புரிந்துக் கொண்டவர்
புன்னகைப் பூத்திடுவர் !
விளங்காமல் இருப்பவர்
குழப்பத்தில் மூழ்குவர் !
பிறந்த நாளை
அறிந்த நாம்
இறக்கும் நாளை
அறியோம் நிச்சயம் !
இதுவரை நாம்
செய்ததை நினையாது
இனிவரும் காலத்தில்
நல்லதே செய்வோம் !
உதிர்ந்தக் காலத்தை
உதறித் தள்ளுவோம்
எதிர்வரும் காலத்தை
எதிர்கொண்டு வெல்வோம் !
பழனி குமார்
11.06.2020