நானே உரமானால்
விளைச்சலுக்கு வழியில்லை...
விண்ணை பார்த்தும் பயனில்லை...
வீணாய்ப் போனது நேரம் மட்டுமே!
வீழ்ந்து போனது பயிர்களும்
கூடவே...
எந்நிலத்தில்!
இங்கு,
விளைவிக்கும் விவசாயிக்கோ
ஒருகைப்பிடி உணவில்லை...
ஏரை மறுகைப்பிடிக்கவும்
உடலில் வலுவில்லை...
என்ன செய்வேன் நான்?
உயிருக்காக ஓடவா?
இல்லையேல்,
உயிருடன் சாகவா?
வழி தெரியாமல் நிற்கிறேன்...
விழி தவறி விழும் கண்ணீரைக்
கொண்டு
கால்வாயை நிரப்பி விடலாம்!
என்று கற்பனையில்...
என் வினாவுக்கும்
விடைகிடைக்காமலில்லை...
விதைப்பவன் நான்!
விளைவிப்பவன் நான்!
இம்மண்ணிற்கு,
நானே உரமானால் என்ன?
வழி பிறந்து விட்டது...
எமக்கு வழி பிறந்துவிட்டது!
"நான்" என்னும் ஒற்றைச்
சொல்லில்...
என் விவசாயம் வாழத்தான்
செய்யும்...
என்னால் வீழப்போவதில்லை!
என்ற நம்பிக்கையுடன்,
விடைபெறுகிறேன்.... !

