DHIYA - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  DHIYA
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  17-Apr-2020
பார்த்தவர்கள்:  195
புள்ளி:  16

என் படைப்புகள்
DHIYA செய்திகள்
DHIYA - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Feb-2021 8:45 am

வெள்ளைப்பாவாடை அணியச் சொன்னாள்
கன்னித்தன்மையின் சோதனையோ?
என்று எண்ணினேன்…..
அது அந்தகாலம்…. அவர்கள் அப்படித்தான் என்று ,
வெள்ளி சொம்புடன் உள்ளே சென்றேன்
என் கணவனிடம் இந்த நிரூபணம் தேவையில்லை
என்று எண்ணியே…..
உல்லாசம் முடிந்ததும் உதிரம் வரவில்லையே என்றான்
உளருகிறயா?...... என்றேன்.
முன்பே உடலுறவு கொண்டால் எல்லாம் உளறல்களாகதான் தோன்றும்…. என்றான்
உணர்ச்சி பொங்கிய குமரல்கள்…..
உதிரம் பெண்ணின் கன்னித்தன்மையை தீர்மானிக்கையில்!
ஒன்று மட்டும் கேட்க ஆசைப்படுகிறேன்.
பிறப்பிலே திரையற்று பிறப்பவளிடம் கன்னித்தன்மையை எங்கே தேடுவாய்?
உடற்பயிற்சி செய்பவளிடம் உடலுறவு கொள்ளும் முன்பே

மேலும்

DHIYA - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Feb-2021 8:31 am

எதிர்பார்த்த தருணம்தான்….
எதிரியின் துப்பாக்கி குண்டுகள்
என் மார்புகளை
என்றாவது துளைத்து செல்லும்
என்று!
அது இப்போது என்றுஅறியவில்லையே….
ஆம்…..
என் உடல் இவ்வுலக்கிக்கு வந்த கடமை நிறைவேறியது.
என் மற்றொரு இந்திய தாய்க்கு
நான் செய்ய வேண்டிய கடமை முடிவேறியது.
எம் மக்களுக்கு நான் ஆற்றிய பணியும் இதனால் சிறப்பேறியது.
இதற்கு மேல் என்ன வேண்டும்?
என் இதயத்திலிருந்து வரும் உதிரம் என் நாட்டை அலங்கரிக்கையில்....
என் மார்பில் பதிந்த பதக்கங்கள்,
துளைத்த குண்டினால் பெருமிதம் கொள்கிறதே!
இருப்பினும் சின்ன தயக்கம் தான்…
பெற்ற மகனை நினைத்து பெருமிதம் கொள்வதா?
இல்லையேல்,பெருந்துயரம் கொள்ளவா

மேலும்

DHIYA - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Feb-2021 8:25 am

வீழ்ந்து விடுவேனோ?
என்று எண்ணுகையில்
வீழ்த்தி விட்டாளே!
வீதியின் அழகியவள்….
கண்மையிடாத கண்களாகினும்
அவை என்னிடம் சொல்ல வந்த கதை வேறாயிற்றே…
மொழி உண்டு
ஆனால், அதில் வார்தைகள் இல்லை!
அர்த்தம் உண்டு
ஆனால், அதில் அசைவுகள் இல்லை!
இப்படியாக ஒரு காதல் கதை….
அவள் விழிபார்வையுடன் கோர்த்த மௌனத்தில்!
அழகாக காதலை சொல்லிவிட்டாள்…
இதற்கான பதில்தான் அவனிடம்
என்னவோ என்று
சற்றென நிமிர்ந்து பார்த்தாள்
சடக்கென்று குனித்துகொண்டேன்...
ஓராயிரம் வார்த்தைகள் உண்டாயினும்
உன்னிடம் கூற ஒரு வார்த்தை கூட உதிராததை எண்ணி
வெட்கம் கொள்கையில் !
எமது தயக்கம் கலைந்ததடி பெண்னே!
(காதல்மொழியில்

மேலும்

DHIYA - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Dec-2020 7:10 pm

பானைச்சட்டியில் சமையலா?
பாத்திரம் உன்னிடம் இல்லையா?
என்று ஏசினேன் எந்தன் கிழவியை!
கண்டுக்கொள்ளாமல்
உணவைப் பரிமாறினாள்...
உலகமே அறிய கண்டிடாதா
உணவது...
உணர்வோடு விளையாடியதே!
முறம் போட்டு புடைத்து
முற்றத்தின் அடுப்பில்
உலையிட்டு இருப்பாள் போலும்...
அருவாமனையில் முனையறிந்து
குழம்பிட்டு இருப்பாள் போலும்...
அம்மியில் மிளகரைத்து
மிடுக்காய் வைத்துவிட்டாள் ரசத்தை!
ருசிக்கத்தானோ....
என் வயிற்றில் மீண்டும்
இடமில்லையே.....
ஆட்டுக்கல்லில் இடித்த பச்சரிசி
பலகாரத்துடன்
முடித்துக்கொள்வாள்
என்றிருந்தேன்...!
அட... பாயசத்தையும் எடுத்து
வந்துவிட்டாள்!
அந்த சிறுகுழிசியில்...

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே