காதல் மொழி
வீழ்ந்து விடுவேனோ?
என்று எண்ணுகையில்
வீழ்த்தி விட்டாளே!
வீதியின் அழகியவள்….
கண்மையிடாத கண்களாகினும்
அவை என்னிடம் சொல்ல வந்த கதை வேறாயிற்றே…
மொழி உண்டு
ஆனால், அதில் வார்தைகள் இல்லை!
அர்த்தம் உண்டு
ஆனால், அதில் அசைவுகள் இல்லை!
இப்படியாக ஒரு காதல் கதை….
அவள் விழிபார்வையுடன் கோர்த்த மௌனத்தில்!
அழகாக காதலை சொல்லிவிட்டாள்…
இதற்கான பதில்தான் அவனிடம்
என்னவோ என்று
சற்றென நிமிர்ந்து பார்த்தாள்
சடக்கென்று குனித்துகொண்டேன்...
ஓராயிரம் வார்த்தைகள் உண்டாயினும்
உன்னிடம் கூற ஒரு வார்த்தை கூட உதிராததை எண்ணி
வெட்கம் கொள்கையில் !
எமது தயக்கம் கலைந்ததடி பெண்னே!
(காதல்மொழியில் வார்த்தைகள் ஏதடி ?
ஆதலால் காத்திருந்து அறிந்துகொள்…
இந்த காதலனனின் காதல் காவியத்தை உன்னுடன்!)
_என்றுரைத்த பின்புதான்.