கன்னித்தன்மை

வெள்ளைப்பாவாடை அணியச் சொன்னாள்
கன்னித்தன்மையின் சோதனையோ?
என்று எண்ணினேன்…..
அது அந்தகாலம்…. அவர்கள் அப்படித்தான் என்று ,
வெள்ளி சொம்புடன் உள்ளே சென்றேன்
என் கணவனிடம் இந்த நிரூபணம் தேவையில்லை
என்று எண்ணியே…..
உல்லாசம் முடிந்ததும் உதிரம் வரவில்லையே என்றான்
உளருகிறயா?...... என்றேன்.
முன்பே உடலுறவு கொண்டால் எல்லாம் உளறல்களாகதான் தோன்றும்…. என்றான்
உணர்ச்சி பொங்கிய குமரல்கள்…..
உதிரம் பெண்ணின் கன்னித்தன்மையை தீர்மானிக்கையில்!
ஒன்று மட்டும் கேட்க ஆசைப்படுகிறேன்.
பிறப்பிலே திரையற்று பிறப்பவளிடம் கன்னித்தன்மையை எங்கே தேடுவாய்?
உடற்பயிற்சி செய்பவளிடம் உடலுறவு கொள்ளும் முன்பே
ஹைமென்திரை கிளிகிறதே…..
அப்போது அவளிடம் அதை எங்கென தேடுவாய்?
சுயஇன்பம் கொள்ளும் பெண்ணும் திரையற்றுதானே காண்கிறாள்…
இப்போது கூறடா….
அவர்கள் எல்லாம் கன்னித்தன்மை அற்றவர்களா என்று?
பெண்மை என்னும் சித்திரத்தை நீங்கள் அழகு படுத்தவேண்டாம்…
அதை அறிந்து கொண்டாலே போதுமட….
அவள் ஆனந்தப்படுவாள் என்பதை எப்போது புரிந்து கொள்ள போகிறீர்கள்?
இவ்வறியாமை அகன்று…

எழுதியவர் : தியா (27-Feb-21, 8:45 am)
சேர்த்தது : DHIYA
பார்வை : 106

மேலே