பாட்டியின் சமையலறையில்

பானைச்சட்டியில் சமையலா?
பாத்திரம் உன்னிடம் இல்லையா?
என்று ஏசினேன் எந்தன் கிழவியை!
கண்டுக்கொள்ளாமல்
உணவைப் பரிமாறினாள்...
உலகமே அறிய கண்டிடாதா
உணவது...
உணர்வோடு விளையாடியதே!
முறம் போட்டு புடைத்து
முற்றத்தின் அடுப்பில்
உலையிட்டு இருப்பாள் போலும்...
அருவாமனையில் முனையறிந்து
குழம்பிட்டு இருப்பாள் போலும்...
அம்மியில் மிளகரைத்து
மிடுக்காய் வைத்துவிட்டாள் ரசத்தை!
ருசிக்கத்தானோ....
என் வயிற்றில் மீண்டும்
இடமில்லையே.....
ஆட்டுக்கல்லில் இடித்த பச்சரிசி
பலகாரத்துடன்
முடித்துக்கொள்வாள்
என்றிருந்தேன்...!
அட... பாயசத்தையும் எடுத்து
வந்துவிட்டாள்!
அந்த சிறுகுழிசியில்...
பாசத்தோடு அறிந்துகொண்டேன்!
பண்டைய கால சமையலின்
மகத்துவத்தை....
எனது பாட்டியின் சமையலறையில்!

எழுதியவர் : தியா (1-Dec-20, 7:10 pm)
சேர்த்தது : DHIYA
பார்வை : 200

மேலே