எனக்கு தண்டனை சரியோ

என்னை விதைத்தவன் யாது நினைத்தானோ
என்னை சுமந்தவள் எப்படி சுமந்தாளோ
உயிரை வளர்க்க நல்ல உர உணவு உண்டாளோ
உறவினர் சொல்லால் உயர் கோபம் கொண்டாளோ
தன்னையோ தாயவள் தரந்தாழ்த்திக் கொண்டாளோ
விதைத்தவன் மீது தான் வீம்பு மிகக் கொண்டாளோ
அவளை ஈன்றவர்கள் அவள் எண்ணம் அறியலையோ
புகுந்த இல்லம் அவளுக்கு பிடித்ததாய் இல்லையோ
புகுந்த இடந்தன்னில் பெரும் பூசல் ஆயிற்றோ
எனக்கு முன்னே பிறந்ததற்கு உடனே உதித்தேனோ
என்னை கலைப்பதற்கு யாதேனும் உண்டாளோ
தப்பி பிறந்து விட்டேன் ஊனமுற்ற உடலோடு
என்னை வாழ வைக்க எனக்கே வழித்தெரியவில்லை
ஏளனமும் ஏச்சுயுமாய் எனது நாட்கள் நகர்கின்றது
இப்பிறப்பு பிறப்பதற்கு நான் ஏதும் செய்யவில்லை
இச்சைக் கொண்டவனுக்கு இடங்கொடுத்தவள் இருக்க
இயலாதவளாய் பிறந்த எனக்கு தண்டனை சரியோ.
---- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (15-Jun-20, 8:24 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 57

மேலே