அரும்பு மீசையுடன்

தாடி வைத்த காதலன்
மூடி வைத்த காதல் பற்றி
தன் சோகத்தை பேனையின்
முனையில் சொருகி வைத்து
மூன்றுப்பக்கம் மை சிந்தி
கவிதை எழுதுகிறான்.
காதலன் வேறாருமில்லை..
கவிதை எழுதும் நான் தான்...

பள்ளி செல்லும் காலம்
உண்மையில் இது தான்
முதல் காதல் பாலம்
அரும்பு மீசை முளைத்தது.
அநியாயமாய் காதலும் கூட
சேர்ந்தே முளைத்தது..

ஓமோன் செய்தது சதி
பக்கத்து வகுப்பறையவள்
படபடக்கும் என் இதயம்..

கண்ணாடி அணிந்த
அழகிய காதலி
அவள் பின்னாடி செல்ல
நான் விரும்பவில்லை..
காரணம் காதலும் கல்விக்கு
தடையாம் என்றார்கள்
என்னருமை நண்பர்கள்...
தடுமாறினேன் முடிவெடுத்தால்
வாழ்க்கை மொத்தமாய்
முடிந்து விடுமோ என்று...

பதினாறு வயது எனக்கு
பன்னிரண்டு மாதத்தில்
பொதுப்பரீட்சையும் எனக்கு
கல்விக்காக காதலை
மறக்க தயாராகினேன்..
ஐயோ! தவறு, தவறு..
காதலையல்ல காதலியை...

நீரில் சீனி கரைவதைப் போல்
காதலும் காலத்துடன்
கரைந்தே போனது..

பரீட்சையில் தோற்றினேன்..
தோற்றுப்போயிேன்.
பரீட்சையில் மட்டுமல்ல..
காதலிலும் சேர்த்து தான்..

பள்ளிக்காலத்தில் அவள்
எனக்கு காதலி நான்
அவளுக்கு தோழன்..
இன்று அவள்
அவள் எனக்கு காதலி
நான் அவளுக்கு யாரோ...

எழுதியவர் : கவியாழன் கோபிகிஷாந் (17-Jun-20, 11:08 pm)
சேர்த்தது : கவியாழன்
Tanglish : arumboo meesaiyudan
பார்வை : 274

மேலே