சிவந்தது என் கண்களும் செவ்வானமும் 555

உயிரானவளே...


செங்கதிர் கதிரவன்
மெல்ல உதயமாக...

செவ்விளனி மேனிகொண்ட
நீ என் கரம் பற்றினாய்...

நெருப்பில் குளிக்கும்
கடல்நீரை ரசித்துக்கொண்டு...

என் கன்னம்
கடித்தாய்...

உன் தோல் சாய்ந்தேன் நெற்றியில்
முத்தம் பதித்தாய்...

உன் மடியில்
சாய்ந்தேன்...

இதழ்களோடு
இதழ்கள் சேர்த்தாய்...

செவ்வானத்தையும்
நீரையும் ரசித்துக்கொண்டு...

மணற்பரப்பில்
ஓர் நடை பயணம்...

ஒருமுறை அனைத்து
கொள்வாயா என்றாய்...

காலமெல்லாம் என்றேன்
உன் கரம் பிடித்து...

என் கரம் நீ
பிடித்து சொன்னாய்...

இதுதான் நம்
இறுதி சந்திப்பு என்று...

சிவந்தது கீழ்வானம்
மட்டுமல்ல என் கண்களும்தான்...

கார்மேக மேனி
கொண்ட எனக்கு...

என் வாழ்வும்
இருளானது...

இருளான என் வாழ்வும்
சிவந்த என் கண்களும்...

இன்றுவரை பௌர்ணமி
நிலவை ரசிக்காமலே.....

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (13-Jun-20, 5:00 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 801

மேலே