அப்பா
நெஞ்சில் நீ தேக்கிய அக்கினிப்
பிழம்புகளின்,
நிழலைக் கூட போர்த்தவில்லை
என் மேலே.
உன் உழைப்பையெல்லாம்
இறைச்சுவிட்டு,
என் உள்ளமெல்லாம்
நிறைச்சுவிட்டு,
நீல வானில் புகையா நீ
கரைஞ்சு போன, எம்
நெஞ்சமெல்லாம் நின்னு
நிறைஞ்சு போன.
மண்ணிறைஞ்சு வாழ்ந்து
மறைஞ்சாலும்,
விண்ணிறைஞ்சு நிக்கிறய என்
மனசுக்குள்ள.
புதுசா வந்திங்கே நீ
பொறக்க வேணும்.
உன் பாதத்தில் செருப்பாய்
நான் பதிய வேணும்.