மனதிற்கு பிணியை

மனதிற்கு பிணியைக் கொடுப்பது எண்ணம்
மகத்தான வாழ்விற்கு மனதே திண்ணம்
ஒவ்வொரு செயலிலும் உண்மை வேண்டும்
உண்மை இருந்தால் வெற்றி நம் சொந்தம்
மக்கள் கூட்டத்தில் மூடர்களே அதிகம்
முழுவரையும் அறிந்து வாழ முயல்வது துன்பம்
பணமே மனிதருக்கு முதன்மையான பந்தம்
பாசம் நேசம் என்பதெல்லாம் பாகற்காயாகும்
பொய்யும் புரட்டும் தற்கால வாழ்வின் நெறியாகும்
பிள்ளைகள் சொத்துக்காக பெற்றோரை கொல்லும்
ஐம்பூதத்திற்காக உலகில் போரது மூளும்
அடக்கமில்லா மாந்தரால் அமைதி எங்கும் குலையும்
அறிவியல் இயற்கையை அழிக்க துணியும்
ஆனாலும் அழிவே எவற்றையும் வெல்லும்.
------ நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (22-Jun-20, 8:14 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 78

சிறந்த கவிதைகள்

மேலே