தங்கச்சி

நீ மணமுடிச்சு மனையகலுந்நாளிலே
பால்குடி மறக்குமுன்னே தாய் பிரிஞ்ச மகனாக
மகள் பிரியும் தந்தையாக தத்தலிச்சுப்போனேன்
பொட்டல் காட்டு ஒத்தமரமாட்டம்
ஓலை கொட்டுன மொட்டப்பனையாட்டம்
ஓரியாகி
ஆந்தையாட்டமுழிவிழிச்சு இரவுகள் பிழைச்சு
எல கொட்டுன பட்டமரமாட்டம் பகலுகள் போக்கி போக்கத்துப்போனேன்
உம்பாசம் பாய்ஞ்சு போகம் பல விளஞ்ச நஞ்சையாய் நானிருந்தது மாறி
இப்ப உன் பார்வ பட்டு பஞ்சம் தணிஞ்சா சரியென
துளி மழையான உன் ஒருநாள் வரவிலும்
அடமழையா ஆர்ப்பரித்து ஆடும்
வெடிப்பு பாய்ஞ்ச வயலாகிப்போனேன்
நீ எனக்கு அன்னையா
நானுனக்கு அண்ணனா
ஆயிடை எல்லை அழிஞ்சு பல நாளாச்சு

எழுதியவர் : கொற்றன (2-Jul-20, 4:08 am)
சேர்த்தது : கொற்றன்
பார்வை : 261

மேலே