அவளின் அகம்
புத்திலிருந்து தலக்காட்டும் பாம்பு கொத்த
கண்ணுக்குத்தா கங்காணிக்கும் பருந்து போல
புறம் நின்னு பெண்கள் அகம் அறிய முனைவது
கரையில் நின்னு கடல்வாழ் திமிங்கலத்துக்கு வலை விரிப்பது போல
கருக்கல் பொழுதில் கிடக்கும் குச்சிய ஊறும் பாம்பென கண்ணு காணுறத போல
ஆணவம் அடிவேறு விட்ட ஆண் பார்வை
அவள் அகம் ஊடி பார்ப்பதெல்லாம் குச்சி
இடும் பெயரெல்லாம் ஊறும் பாம்பு
தடாகம் ததும்பும் தாமரை மலர் கணக்காய்
அவர்களே தம் அகங்களை
நம் விழிகளின் வழியில் பறிச்சு கொட்டும் பொழுது
ஏனோ நம் விழிகள் விழித்திருப்பதில்லை