புத்தன் வீட்டுப் பூக்கள் ---தொடர் 16---

புத்தன் வீட்டுப் பூக்கள் - ௧௬

151. பொறுப்பை எதிர்பார்த்துப் பொதுவேலை செய்பவன்
பொறுப்பில் அமர்ந்ததும் பொய்யாக வேலை செய்வான்.

152. உழைப்பு இல்லாத உயர்வு என்பது
ஒழுங்கின்றி அடுக்கிய புத்தகம் போல் சரிந்தே விழும்.

153. உள்ளத்தில் அமைதி இல்லை என்றால்
உன் ஒவ்வொரு செயலும் சரியாக நடக்காது.

154. அன்பில்லா உறவும் பண்பில்லாப் படிப்பும்
உன்னை உயரத்திற்கு அழைத்துச் சென்று தள்ளிவிடவே பார்க்கும்.

155. உன் கடமையைக் கடமைக்காகச் செய்தால்
என்றைக்கும் மதிப்புக் கிடைக்காது.

156. எல்லாருடைய மனதிலும் பயம் இருக்கிறது
அந்தப் பயத்தைப் பலவீனமாக்கத் தெரிந்தவன் தான் வீரனாக மாறுகின்றான்.

157. எல்லா எதிர் கருத்துகளையும் ஒதுக்கி விடாதே
அவற்றுள் உன்னைச் செதுக்கும் சிற்றுளியும் உண்டு.

158. பயம் ஒருத்தர்க்குத் தோல்வியைக் கொடுக்கும்
இன்னொருத்தர்க்கு வெற்றியைத் தரும்.

159. உன் நிலத்தைப் பறிப்பது விவசாயம் செய்வதற்கல்ல
உன்னை அழிப்பதற்கு என்பதைப் புரிந்துகொள்.

160. வளர்ச்சி என்று நிலத்தினைக் கேட்கும் திட்டம் தேவையில்லை
வளர்த்த மண்ணை இழப்பது போன்ற துன்பம் ஏதுமில்லை.

...இதயம் விஜய்...
..ஆம்பலாப்பட்டு..

எழுதியவர் : இதயம் விஜய் (4-Jul-20, 10:59 am)
சேர்த்தது : இதயம் விஜய்
பார்வை : 68

மேலே