அச்சில் வார்த்தசிலை

அச்சில் வார்த்த சிலையாம்
அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

உன்னைநான் பார்த்த போதுமண்ணை
நோக்கிய துண்மைய தக்காலம்
இன்றுநீ எப்பவும் அச்சமின்றி
என்னையே பார்க்கிறாய் புரியுதெனக்கு
வின்னைநான் பார்த்த போதுநீயும்
என்னை நீ பார்த்தது அக்காலம்
வின்னைநான் பார்க்க வுமேநீ
இன்று வின்னையே பார்க்கிறாயே

அச்சமில் லைமட மில்லையின்று
நாணமில் லைபயிர் புமென்றாரே
வச்சகண் ணைவாங் காமத்தான்
அவளும் என்னைப் பார்க்கிறாள்பார்
அச்சில் வார்த்த சிலையவளே
ஆயினும் பழையப் பெண்ணில்லை
நச்சென நானும் சொல்லிடவும்
வம்பாய் கோபிப் பாள்விடுங்கள்


அந்த ஆடவன் தொட்டிடவும்
அணங்கு உதறிய தக்காலம்
சொந்தமாய் சொக்கிய வன்மேலும்
சாய்கிறாள் சரசமே செய்கிறாளே
சிந்தனை யில்லா சிறுவயது
பேதைக் கேதுசொல் ஓடுகிறாள்
விந்தையை தீர்த்திட முன்னோரும்
செய்தார் பால்ய திருமணமே

எழுதியவர் : பழனிராஜன் (4-Jul-20, 10:11 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 441

மேலே