புத்தன் வீட்டுப் பூக்கள் ---தொடர் 17---

புத்தன் வீட்டுப் பூக்கள் - ௧௭

161. குற்றம் செய்தவன் மேல் பாய வேண்டிய சட்டம்
குற்றத்தைச் சுட்டிக் காட்டுபவன் மேல் பாய்வது கொடுமை.

162. பொது இடத்தில் யதார்த்தமாகப் பேசும் ஒரு சொல்
அடுத்தவர் மனதை ஆழமாகக் காயப்படுத்தி விடும்.

163. பொது இடத்தில் பேசும் போது பொறுமையோடு பேசு
நீ தவறவிடும் வார்த்தைகள் சர்ச்சையில் முடிந்துவிடும்.

164. சிறு தீப்பொறி பெரும் காட்டை எரிப்பது போல்
சிறு பிரச்சனை பெரும் கலவரத்தைத் தந்துவிடும்.

165. உடலை வருத்திச் சம்பாதித்த பணத்தைப்
பின்னாளில் உடலைத் தேற்றுவதற்கே செலவிடுகிறான்.

166. உழவனைப் போல் நடிப்பவனுக்குக் கிடைக்கும் மதிப்பு
உண்மையான உழவனுக்குக் கிடைப்பதில்லை.

167. வேற்றுமையில் ஒற்றுமையைச் சொல்கிறது ஒரு வண்ணத்துப்பூச்சி.

168. உன் முகமூடி கிழிவது அவமானம் என்று நினைக்காதே
நீ மீண்டும் மனிதனாய் பிறக்கிறாய் என்று நினைத்துக்கொள்.

169. கல்விக்கு ஏற்ற வேலையைத் தேடி அலைந்து
காலம் தந்த வேலையை ஏற்றுக் கொண்டோர் அதிகம்.

170. உலகம் உங்களைப் உற்றுப் பார்க்கிறது
உங்களை வைத்தே உங்களை மிரட்டுவதற்கு.


...இதயம் விஜய்...
..ஆம்பலாப்பட்டு..

எழுதியவர் : இதயம் விஜய் (5-Jul-20, 10:54 am)
சேர்த்தது : இதயம் விஜய்
பார்வை : 120

மேலே