அரிதார முகங்கள்
வாருங்கள்.!!
மற்றுமொரு...
காலை வணக்கம் சொல்லி,
கடமை பார்க்கச் செல்லுங்கள்.
நல்ல காலை எதுவென்று
நாள்காட்டிக்கு தெரியவில்லையாம்.!
தெரிந்தால் சொல்லுங்கள்.
தினசரி வழக்கமாய்...
வழக்கத்தில் பழக்கமாய்...
தினமும் சொல்கிறோம் நல்ல காலை,
கைக்கூலி கேட்காத எழுத்துக்களுக்கு
கடியம் காட்டி
எதுவும் கொடுக்கத் தேவையில்லை.
என்பதாலா???
புதிது புதிதாக...
லாவக சொற்கள்...
புரிந்தோ புரியாமலோ...
கடந்து சென்று...
கடமை பார்த்து...
கடமைக்கென கடமையாய்...
கானல்நீர் வாழ்க்கை.!!
ஆளுக்கு ஏற்றார் போல்
முகமூடியிட்டு
அரிதார முகங்கள்.!
அருமைதான் போங்கள்.!