கல்லுக்குள் எழுதப்பட் காதல்...!!

கல்லுக்குள் எழுதப்பட் காதல் ஒன்று
முற்றுப்பெறுகிறது இன்றோடு...!!

முதல் காதல் கேற்கும் கேள்விகள் இவைதான்
பதில் சொல் உன்னால் முடிந்தால்...!!

நானே கதியென்று என்னை சுற்றிவந்தவன் நீ
இன்று என் சாயலில் வேறொருத்தியயைப் பார்த்ததும்
என் காதலை நீ துச்சமாக துாக்கி எறிந்தது சரியா??

இல்லை காதலுக்கு அன்பு தேவையில்லை
உருவம்தான் முக்கியம் என்று
காதலுக்கு புது பரிணாமம் புகட்ட வந்தவனா நீ??

ஓஓ...ஒருவேளை உணர்வுகளை
புரிந்துகொள்ளாதவன் பார்வையில்
உருவம்தான் முக்கியம்போலும்...!!!

என்னோடு பழகிய நாட்களை
மறக்காமல் இருக்க காவியமாக்கியவன் நீ
இன்று என் நினைவுகளுக்கு சமாதிகட்ட
எப்படி முடிந்தது உன்னால்...!!

நான் பாவித்த பொருட்களை
சேமித்து வைத்து அவ்வப்போது
எடுத்துப்பார்த்து ஆறுதல்கொண்ட
உன் மனம்தான் இப்போது மரணித்து விட்டதா???

சென்றுபார்
உன் அலமாரியில் அர்தமிழந்த
சொற்களை சுமந்து இருக்கும்
ஒரு வெற்று புத்தகம் தன்னை
அழித்துகொள்ள உயிரில்லாமல் தவிப்பதை
முடிந்தால் எடுத்து அழித்துடு.
என்னை நீ மறந்தைபோல்...!!

உன் மணிப்பேர்சில் என்றும்
துாக்கியெறியப்படாமல்
ஒட்டிக்கொண்டிருக்கும் என்
புகைப்படத்தை நீ காலம் காலமாய்
சுமந்ததிற்காய் நன்றி கூறுகிறேன்
தயவுசெய்து அதனை எடுத்து எரித்துவிடு
இனி தேவையில்லை உனக்கு
என் சாயலில் ஒருத்தி இருக்கையில்...!!

இவ்வளவு காலமும் போகும் இடமெல்லாம்
நீ என்னை அர்த்தமற்று சுமந்ததிற்காய்
உன்னைப்பார்த்து ஏளனம் செய்கிறது
உன் மணிப்பேர்ஸ் அது தெரியுமா உனக்கு.........!!

வலிக்குது நீ இப்படியானவனா என்று....!!

எழுதியவர் : - ஜோ - (18-Sep-11, 2:55 pm)
பார்வை : 336

மேலே