காதல்
பொறுமை இல்லா என் அதரத்திற்கு
மதுக் கினமாம் அவள் அதரத்தோடு
உறவாட ஆசை அவளோ அது
சாத்தியமில்லை இப்போது பொறுத்திரு
நாளை உந்தன் வதுவாக
நான் உஙகைத்தடம் பற்றும் வரை
என்றாளே என் வாய் அடைத்து.