சிறந்த காதல் கவிதை

💓❣️💓❣️💓❣️💓❣️💓❣️💓

*கவிதை*

படைப்பு *கவிதை ரசிகன்*

💓❣️💓❣️💓❣️💓❣️💓❣️💓

மண்ணும்
என் கண்ணில் விழுந்திடாதோ
அவள்
மலர் உதட்டால் ஊதிடவே...!

பூமியும்
மெதுவாக சுற்றிடாதோ
அவளிடம்
இன்னும் கொஞ்சம் பேசிடவே....!

காய்ச்சலும்
எனக்கு வந்திடாதோ
அவள்
கைகளால் தொட்டு பார்த்திடவே...!

மயக்கமும்
என்னை சேர்ந்திடாதோ
அவள்
மடியில் என்னை சுமந்திடவே...!

வியர்வை
முகத்தில் வடிந்திடதோ
அவள்
விரல்களால் துடைத்திடவே...!

முல்லும்
என் காலில் குத்திடாதோ
அவள்
தோளில் என்னை தாங்கிடவே...!

கல்லும்
என் காலில் இடித்திடதோ
அவள்
கைகளால் கட்டுப்போட்டிடவே...!

கடவுளே!
என் காதலை
ஊரறிய செய்வாயோ
அவளை
விரைவில் திருமணம் செய்திடவே...!

*கவிதை ரசிகன்*


💓❣️💓❣️💓❣️💓❣️💓❣️💓

எழுதியவர் : கவிதை ரசிகன் (7-Jul-20, 8:43 pm)
பார்வை : 46

மேலே