தூண்டிய எண்ணத்தில்

உள்ளத்தால் உணருவோம் நல்லதனை
நல்லதால் நலமடையும் நல்லுலகம்
நல்லுலக தர்மங்கள் நலன் பயக்கும்
நலன் பெற்றோர் யாவரும் உத்தமராய்
உத்தம செயல்களால் உலகம் செழிக்கும்
செழிப்பே பலவற்றை அரவணைக்கும்
அரவணைப்பால் எல்லாம் சமமாகும்
சமமே யாவரையும் சாதிக்கத் தூண்டும்
தூண்டிய எண்ணத்தில் தூய்மை வேண்டும்
வேண்டியதை பெறுவதே ஆற்றலாகும்
ஆற்றலால் அனைத்தையும் சாதிக்கலாம்
சாதனை என்பது உலகை காக்க வேண்டும்.
------ நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (10-Jul-20, 8:53 am)
சேர்த்தது : நன்னாடன்
Tanglish : thuuntiya ennathil
பார்வை : 262

சிறந்த கவிதைகள்

மேலே