கனவு

விழி வாசல் வந்த கனவே
இமை மூடியும் கலையாத தவமே  
இதயத்தில் துடித்திடு ஓசையென - நில்லாமல்  
உலகத்தில் உதித்திடு துன்பத்து தீர்வென...

கனவாகவே மனதில் மடிந்திட்ட கனவே
மற்றொரு மாகனா உருவாகவே நீ உணவாகவே!
ஏமாற்றம் தந்தத்துன்பம் மனதில் நல்ல 
மாற்றமும் தருமாயின்  எத்துன்பமும் இன்பமே!

எழுதியவர் : தினேஷ் காளிமுத்து  (3-Aug-20, 10:44 pm)
பார்வை : 1912

மேலே