வெற்றி நம் கையில்

வெற்றி நம் கையில்
**********************
கண்மூடி காணும் கனவு
கலைந்திடும் கலங்காதே_ நீ
கண்திறந்து காணும் கனவு வாகைச்சூடும் மறவாதே

முடியாதது  உன்னால் எதுவுமில்லையே
முயற்சி நீ செய்தால் தவறுமில்லையே
காலம் ஒருநாள் மாறும் பொறுத்திடு
வாழ்வில் வசந்தம் வீசும் உழைத்திடு

ஆசையில் பிறந்திடுமே வேட்கை
நம்பிக்கை தானே நம் வாழ்க்கை
உன்னால் எல்லாம் முடியும்
முயன்றால்  கையில் இமயம்

விதையில் ஊக்கத்தை விதைத்திடு
வியர்வை நீரை   ஊத்திடு
விளைச்சல் வரும்வரை காத்திடு
விளைந்ததும்  வெற்றியில் மகிழ்ந்திடு

காலம் மாறிப்போகும் _ நீ
கண்டகாட்சி மாறும்
விண்ணும் உன்னைவியக்கும்_ நீ
விடாமுயற்சி நிறுத்தும் வரைக்கும்

வெண்ணிலவும் உன்னை ரசிக்கும்
விடியல் வாசல்வந்து திறக்கும்
விழித்திரு(ற)ந்தால் போதும்
தென்றல் வந்து மோதும்


சரவிபி_ரோசிசந்திரா

எழுதியவர் : சரவிபி ரோசிசந்திரா (8-Aug-20, 9:40 pm)
Tanglish : vettri nam kaiyil
பார்வை : 1530

மேலே