நீ போகயிலே

கண்டாங்கி சேலை கட்டி
கண்ணே நீ போகயிலே
முந்தானை முன்
மண்டியிட்டதடி மனம்...

பட்டு சேலை கட்டி
பரபரப்பாய் நீ போகயிலே
கொசுவத்தில் மனம் பிண்ணிக்கொண்டதடி...

பருத்தி சேலை கட்டி
பக்குவமாய் நீ போகயிலே
பால் நிலா போல்
மனம் பருவம் கொண்டதடி...

தாவணி கட்டி
தாளம் போட்டு  நீ போகயிலே!
தளர்ந்ததடி மனம்...

- முத்து துரை சூர்யா

எழுதியவர் : மூ.முத்துச்செல்வி (17-Jul-20, 4:00 pm)
பார்வை : 274

மேலே