ப்ளஸ் டூ

முந்நூற்று அறுபத்தைந்து
நாட்களின் தவங்களில்
வரமாய்க் கிடைத்தன
நண்பர்களின் பிள்ளைகளுக்கு
நல்ல மதிப்பெண்கள்...

வசந்த வாயில்களின்
சாவிகள்தான் இவை...
வருகின்ற வழிகளெல்லாம்
வசந்தங்கள் வரவேற்கட்டும்...

சரித்திரத்தில் இடம்பிடிக்க
வேண்டும் என்பதில்லை...
தன்னைத் தனக்குப் பிடிக்க
வாழ்ந்திருக்கட்டும்...
சரித்திரம் இவர்களைத் தானே
தன்வசப்படுத்திக் கொள்ளும்..

வெற்றிகள் சேரும்
இடங்களில் மட்டுமல்ல...
பயணிக்கும் விதங்களிலும்தான்...

பயணப்படும் பாதைகளில்
திரும்பிப் பார்க்கும்போதெல்லாம்
சரியாகத்தான் வந்து
கொண்டிருக்கிறோம்... என்கிற
உணர்வு ஒன்று போதும்...
உலகமே கையில்
வந்தது போலாகும்...

படித்தது பத்து ப்ளஸ்டூ இங்கு..
வாழ்வில் ஜெயிப்பது...
விரும்பியது ப்ளஸ் பலமடங்கு
ஆகிட பிள்ளைச் செல்வங்களுக்கு
நல் வாழ்த்துக்கள் பல...

அன்புடன்...
ஆர். சுந்தரராஜன்.
👍👏😀💐🙏🌹🌸

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (17-Jul-20, 11:11 pm)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
பார்வை : 176

மேலே