திறமைக்கு உண்டோ வேலி
குடிக்க கும்மாளம் போட காசு வேண்டுமென அப்பா
குழந்தையை பள்ளிக்கு அனுப்ப மறுத்தான் – அம்மா
குழந்தையின் திறமையில் - மாறாத நம்பிக்கையில்!
குழாயடி சண்டை தான் தினமும் இருவர் இடையில்!
திறமையை சங்கீதத்தில் கொண்ட அந்த சிறுவன்
தந்தைக்காக படிப்பைத் துறந்த பீட் ஹோவன்
தாயின் பக்க பலத்தால் பாட்டு படித்து முடித்தான்
தாய் நாடே பாராட்ட தன் திறமை வளர்த்தான்
சங்கீதக் குழு ஒன்றை அமைத்தான் இள வயதில்!
சாதனை படைத்தான் நாடு போற்ற இசையில் !
சந்தோஷம் நிலைக்க வில்லை ! உடல் குறை வடிவில்
சாமர்த்தியமாயதை மறைத்து சாஹித்யத்தில் சாதித்தான் !
இசை மழை பொழிந்து கொண்டிருந்தான் ஒருநாள்!!
எக்கச்சக்க ரசிகர் ! எள் போட இடமேயில்லை அரங்கில்
அனுபவித்து மகிழ்ந்தனர் மெய் மறந்து ! அரவமேயில்லை!
எல்லாம் முடிந்தது ! ரசிகர் கரகோஷத்திற்கு அளவேயில்லை!
மக்களை அசட்டை செய்த படி, !குச்சியை துடைத்த படி !
முதுகை திருப்பியபடி!! ஹோவன் தன் குழுவை பார்த்தபடி !
குழுவில் ஒருவர் ! தலைவன் குறை புரிந்தவர் ! சடுதியில்
ஹோவனுக்கு காட்டினார் சமிக்ஞை!! திரும்பினான் மேதை !
அமைதி நிலவியது ! அரங்கமே அடங்கியது ! எழுமே சத்தம்
அங்கே எள் போட்டாலும் ! அனைவரின் கண்ணிலும் கண்ணீர்
அழகான சங்கீதம் அளித்த ஞானி செவிடு! காது கேட்காது !
அதனால் அறிவோம் இன்று ! திறமை இருப்பின் குறை தெரியாது!