படபடப்பு

செவியுணர் திறன்
இருபது ஹெர்ட்ஸ் ஐ விட
அதிகமல்லவா..
இது என்ன...!!
கருப்பு வெள்ளை பட்டாம்பூச்சியாய்
உன் கண்ணிமைகள் படபடப்பதை
என் காதுகள் மட்டும்
ஒலிபெருக்கி கொண்டு கேட்கின்றனவா..

ஓ..
இல்லையில்லை..
என் காதுகளில் ஒலிப்பது,
உன் கண்களின் படபடப்பில்
வெடவெடத்துப்போன
என்  இதயமடி பெண்ணே..

எழுதியவர் : துகள் (20-Jul-20, 7:10 pm)
பார்வை : 112

மேலே