இரைச்சல் உளைச்சல்
இடிமுழக்கமா இல்லை
இடியமின் முழக்கமா
இரைச்சலின் இடையே
இழி வாழ்விது
உலோக கலவை
உருக்கி ஊற்றியதாய்
உள்மண்டைக்குள்ளே
உஷ்னம் ஏறுது
துருவபனி மொத்தம்
துளைத்து கொட்டினாலும்
துளியும் தணியாத
துன்பம் தானிது
காதலியே உந்தன்
காந்த குரலால் எந்தன்
காதுக்குள் செல்ல
கானம் பாடிடு
அன்பின் மொழிக்கேட்ட
அந்த ஆனந்தத்திலே
அனல் ஆறி விடும்
அந்நாள் என்று வரும்?