மெளன மேகம்
மெளன மேகம்
என் வாய் மொழியின்
மடை அடைத்து
மனம் நிறைத்த மெளனம்
அங்கே
மனத்தின் அடித்தட்டில்
காய்ந்தும் காயாத
ரணங்களின் பொருக்குகளைப்
பெயர்த்துவிட
எரிந்த உணர்ச்சி உலையில்
ஆவியாகிப்பபோன மெளனம்
மேகமாய் மீண்டும் மடை திறக்கிறது கண்ணீரோடு கலந்து என் உணர்ச்சி வெள்ளம் பாய்ந்தோட!

