இன்று ஒரு நாள் கழிந்தது
இன்று ஒரு நாள் கழிந்தது
என் வாழ்வு தனில்
இறைவா உன் திருவடி சேர்ந்திட
இன்னும் எத்தனை நாட்கள் எடுக்குமோ?
ஏன் இங்கு வந்தேனோ
விடை தேடித்தேடி நொந்தேனோjQuery17109671068708414186_1640985438907
பாவம் செய்ய படைத்திட்டாயோjQuery171007071162634219275_1641036848452
புவி மேலே பாவியாக திரியவிட்டாயோ??
ஏன் இந்தக் கோலம்??
என்று தான் மாறும் என் காலம்??
இன்று ஒரு நாள் கழிந்தது
இறைவா உன் திருவடி சேர்ந்திட
இன்னும் எத்தனை நாட்கள் எடுக்குமோ?!
அல்லல் அறுக்கும் ஈசா
பாவி இவனை ஆட்கொள்வாயா?
செய்த பாவம் மலை போல் இருக்கு
பாவம் இவன் என கருணை பிறக்குமா உனக்கு??
ஆதியும் நீயே,
அந்தமும் நீயே,
முதலும் நீயே,
முடிவும் நீயே,
எல்லாம் நீயாக இருக்க
கருணை கொண்டு-என்
கர்மவினை அறுத்திடுவாயா?
இனி ஒருபோதும்
பாவம் செய்யாது என்னை காத்திடுவாயா??
இன்று ஒரு நாள் கழிந்தது
இறைவா உன் திருவடி சேர்ந்திட
இன்னும் எத்தனை நாட்கள் எடுக்குமோ?
மண்ணாசை,
பெண்ணாசை,
பொன்னாசை,
களைந்து
உன் மீது ஆசை கொள்ள
செய்வாயா ஈசனே....
அண்டமாக நீ இருந்து
இந்தப் பிண்டத்தை
உன்னுள் கரைத்துக் கொள்வாயா
என் ஐயனே..
இனி ஒரு பிறவி வேண்டாம்,
இனி ஒரு பிறவி அமைந்தாலும் மனிதனாய் பிறக்க வேண்டாம்,
மனிதனாய் பிறந்தாலும்
மனம் சிற்றின்பத்தில் லைய்க வேண்டாம்..,
பேர் இன்பமாய் திகழும்உன்னை மட்டுமே தொழுது உருகும் மனம் நீ தரவில்லை எனில்
இனி ஒரு பிறவி வேண்டாம்....
எல்லாம் சிவமயம்
என உளமார உன்னை
நித்தம் பாடி பாடி,
ஆனந்தக் கூத்தாடி ஆடி,
உன் திருவடி தேடி தேடி,
அலையும் என் உயிரை போக்கிடுவாயா?
இன்று ஒரு நாள் கழிந்தது
இறைவா உன் திருவடி சேர்ந்திட
இன்னும் எத்தனை நாட்கள் எடுக்குமோ??
எல்லாமாய் இருக்கும் சிவனை நினைந்து
என்றும் என்றென்றும்
ஜீவன்..