கிள்ளி கொடு

உன் பெரிய கை கொண்டு
கிள்ளி கொடு,
அவர் சிறிய கை கொண்டு
அள்ளிச் செல்வார்..

உனக்கு வேண்டுமாயின்
அது ஒற்றை ரூபாய்,
அவருக்கு அது நூறு பைசாக்கள்..

மனநிறைவு..
சாப்பிட்டு பாராடுபவரை விட,
சமைத்து பரிமாறுபவர்க்கு அதிகம்..
தனக்காக சாம்பாதிப்பவரை விட,
தானத்துக்காகவும் சம்பாதிப்பவர்க்கு அதிகம்..

கொடு..
கிள்ளி கொடு..
அது போதும்..
அவர்..
அள்ளிச் செல்வார்..
அவருக்கு அதுவே போதும்..

எழுதியவர் : துகள் (25-Jul-20, 11:59 pm)
சேர்த்தது : துகள்
Tanglish : klli kodu
பார்வை : 573

மேலே