ஜிமிக்கி கம்மல்
ஜிமிக்கி கம்மல்
=========================================ருத்ரா
"கொஞ்ச நேரம் பேசாமல்
நில்லேன்.
தலையை ஆட்டாமல்
அசையாமல் இரு.
என் இதயம் கூசுகிறது.
புல்லரிக்கிறது.
அப்புறம்
இன்பமான ஒரு வலி பிறக்கிறது."
"என்ன சொல்கிறாய்?"
"உன் ஜிமிக்கிக்கம்மலை
அப்படியே அசையாமல் வைத்திரு."
"போடா! ஃபூல்
ஆட்டி ஆட்டி அசைப்பதில்
அப்படி
"அந்த பொம்மை மாதிரி"
அசைச்சு வளைச்சு ஒடிச்சு
ஆட்டாமல்
அதுவே இயற்கையாய் ஆடுவதைப்போல்
ஆட்டி ஆட்டி
அழகு பார்ப்பது தானே
எங்களுக்கு ஆசை"
அது இல்லை
இந்தக்கம்மலை
"ஒரு இதயம் கொடுத்து
பவுன் வாங்கி
இன்னொரு இதயத்தையும்
கூலிக்கும் சேதாரத்துக்கும்
கொடுத்து செய்யச்சொல்லி
வாங்கியது.
அது குலுங்கி குலுங்கி ஆடுவது
நம் இதயங்களுக்குள்ளேயே
ஒரு பூகம்பத்தை
இன்ப அதிர்ச்சியாய்
கொடுப்பது போல் இருக்கிறது."
"அப்படியா..சரி
ஒரு சின்னக்கண்ணாடிப்பேழை
வாங்கி வா.."
அவள் அந்த
ஜிமிக்கி கம்மலைக்
கழற்ற ஆரம்பித்தாள்
"அய்யையோ ! கோவிச்சுக்கிட்டியா?"
அவன்
நிஜமாகவே நெஞ்சைப்
பிடித்துக்கொண்டான்.
========================================================
================================================