கண்ணீராய் மிதக்கும் காதல்

உன்னை மறக்க முடியாமல் தவிக்கிறேன்
இது தான் வேண்டும் என்று என் மனம் ஏங்க
வாய் விட்டு சொல்லவும் முடியாமல்
கண்ணீர் விட்டு கதறி அழவும் முடியாமல்
என் தொண்டை குழி அடைக்க
என் இதயம் அலரும் சத்தம்
இங்கு யார் அறிவாரோ
எல்லாம் அறிந்த நீயே என்னைப் பிரிந்து போனாய்
இனி யார் என்னை அறிவாரோ..
மீண்டும் வந்து என்னிடம் சேர்ந்து விடு உயிரே
என் கண்கள் தேடும் கனவு நீ
என் இதயம் தேடும் உலகம் நீ
என் காதுகள் தேடும் காவியம் நீ
என் மூச்சு தேடும் காற்று நீ
என் இதழ்கள் தேடும் அமுதம் நீ
என் கைகள் தேடும் கதிர்கள் நீ
எல்லாம் நீயாக இருக்க .. நான் இங்கு தனித்திருக்க
என் வலிகளை யார் அறிவாரோ..
இறைவா தூதாக நீ செல்ல
என் வேதனைகளை நீ சொல்ல
உன் பாதம் நான் சேர
என் உயிரை என்னுடன் சேர்த்து விடு.

எழுதியவர் : கலைச்செல்வி (26-Jul-20, 4:51 pm)
சேர்த்தது : கலைச்செல்வி கி
பார்வை : 247

மேலே