பெண்ணே உன்னைப் புரிந்துகொள்ள முடியவில்லையே..
போர்க்களத்தில்
பூக்களை நடவுசெய்துவிட்டு
பின் நீயே ஆயுதம்
ஏந்தி வருகிறாய்
புகைந்து கொண்டிருக்கும்
எரிமலை முகட்டில் நின்று
பூபாளமும் இசைக்கிறாய்
சுழன்றடிக்கும் சூறாவளிக் காற்றில்
உன் புல்லாங்குழல்
இசை ஓங்கி ஒலிக்கிறது...
பெண்ணே
உன்னைப்
புரிந்துகொள்ள முடியவில்லையே..