காதல்
அந்த நாள் அன்று நானும் நீயும்
காதலித்து களித்த நாள் என்
ஞாபகத்திற்கு வருகிறதே நீயன்று
மயிலாய் ஆடி மானாய்த் துள்ளி
என்மனமெலாம் நிறைந்தாய் தூக்கத்திலும்
என்மனதை விட்டு நீங்காது -இன்றோ
என்னை விட்டு விட்டு தூரப்போவதேன்
அதற்கவள்,' என் மன்னவனே ஆடிவந்த
துள்ளிவந்த அந்த நாள் இன்ப நாளே
ஆனால் இன்றோ நமக்கு நம்முன்
துள்ளி வரும் ஆடிவரும் பிள்ளைகள்
இருவர் இருக்க என் தாய்மனம் அவர்
பக்கமே என்னை இழுக்கிறதே' என்றாளே
வெட்கி நான் வாயடைத்துப்போக
அவள் அன்னையாய் தோன்றினாள் என்முன்னே
காமம் நீங்க காதல் இதுவென காட்டினாளே