யாவும் வேண்டாம்
படித்தவன் என்ற கர்வம் வேண்டாம்.
மூடன் என்ற பட்டமும் வேண்டாம்.
கரங்களற்ற ஊனமுற்றோன் முன்
உன் மோதிரப் பெருமை வேண்டாம்.
மாந்தருக்குள் மதங்கள் வேண்டாம்.
சாதிகள் வேண்டவே வேண்டாம்.
இங்கே பட்டினிச் சாவிருக்க
பாயாசப் படையல் வேண்டாம்.