சரியாகப் பயன்படுத்துவது

மனித வாழ்க்கையை
மறை முகமாக
அன்று முதல் இன்று வரை
ஆள்வது அறிவு மட்டுமல்ல
அதிர்ஷ்டமும் தான்

பாமர மக்கள் தான்
பொதுவாக அதிர்ஷ்டத்தை
அதிகம் நம்புவார்கள்,
ஒரு குறிக்கோள் இருப்பதே
பெரும் அதிர்ஷ்டம் தானே !

பிடித்தத் தொழிலும்
பண்பு நிறை மனைவியும்
வாழ்க்கையில் ஒருவனுக்கு
வாய்க்கப் பெற்றால்—அவனும்
அதிர்ஷ்டசாலி தான்

அதிகம் உழைப்பவரை தான்
அதிர்ஷ்டமும் நாடும்,
அதிர்ஷ்டமென்று ஒன்றுமில்லை
சந்தர்ப்பம், வாய்ப்பு இரண்டையும்
சரியாகப் பயன்படுத்துவது தான் அது

எழுதியவர் : கோ. கணபதி. (30-Jul-20, 8:31 am)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 42

மேலே